இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மாவட்ட வாக்கு எண்ணிக்கை முகவர் கலந்துரையாடல் கூட்டம்; திமுக மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தனியார் திருமண கூடத்தில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவது குறித்து மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு சிறப்புற செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது . இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மருது மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.