மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொளிக் காட்சி வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக, “கலைஞர் கைவினைத் திட்டம்” தொடக்க விழாவில் 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன் ஒப்பளிப்பு மற்றும் ரூ.34 கோடி மானியத்திற்கான ஆணைகள் வழங்கியதையடுத்து,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். உடன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் .எம்.இராமமூர்த்தி, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் .எம்.சரவணன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் .ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.