தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் நௌஷாத் தலைமையில் நடைபெற்றது…
கூட்டத்தில் கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் நெளஷாத் ஆலோசனை வழங்கினார். மேலும் பாக முகவர்கள் கலந்தாய்வு, வாக்காளர் பட்டியல் ஆகியவை சரிபார்க்கப்பட்டு கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகசாமி, துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி கடையநல்லூர் யூனியன் சேர்மன் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான், உட்பட பலர் கலந்து கொண்டனர்.