By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
அரியலூர்மாவட்டம்

ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்

Last updated: November 16, 2024 10:03 am
November 16, 2024
36 Views
Share
SHARE

அரியலூர், நவ;16

 

அரியலூரில் ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 53 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.89.94 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, 21,862 பயனாளிக்கு ரூ.173.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரியலூர் மாவட்டம் கடலாக இருந்து நில பரப்பாக மாறியது. அதனால் தான் இப்பகுதியில் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. அரியலூர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றே பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தையும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

2021-மே 7-ம் தேதி நான் பதவி ஏற்று முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 575 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை காலங்களில் மக்கள் ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் தவிர்த்தனர். ஆனால், நிகழாண்டு தீபாவளி தினத்தன்று கடைசி பயணி ஊருக்கு சென்ற பிறகு தான் நான் ஊருக்கு செல்வேன் என சென்னையில் நின்றவர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். பண்டிகை காலங்களில் பேருந்துகள் சிறப்பாக, மக்கள் எளிமையாக சென்று வரும் வகையில், போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவரும் கருணாநிதி தான். ராஜேந்திர சோழனுக்கு ஆடிதிருவாதிரை நிகழ்ச்சியை நடத்துவது நாம் தான். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக ரூ.29 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றுள்ளது. நிலக்கரி அனல்மின் திட்டத்துக்கு கையப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும், நிலத்துக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெறாமல் விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்த்தில் 243 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. குன்னம் பகுதிக்கு கொள்ளிடம் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 411 ஏக்கர் பரப்பளவில் காரை பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

 

அமைச்சர் சிவசங்கரின் கோரிக்கையை ஏற்று நதியனூர், ஜெயங்கொண்டம், வெற்றியூர் குடிநீர் திட்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு புதிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். வாரணவாசி கிராமதத்தில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, வாடகை கட்டிடத்தில் இயங்கும் துணை சுகாதார கட்டிடங்களுக்கு அரசு சார்பில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். கால்நடை மருத்துவமனைகள் கூடுதலாக கட்டப்படும். ரூ.24 கோடி செலவில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாற்றில் உயர்மட்டபாலம், வெங்காய பாதுகாப்புக் கூடம், பெரம்பலூரில் ரூ.56 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் கட்டப்படும். அரியலூரில் ஒரே இடத்தில் ரூ.101 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும்.

 

அப்போது ஒரு சிலர் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் அப்படி இல்லை. சொன்ன திட்டங்களை செயல்படுத்துவேன். என்னை தேடி மக்கள் வருகின்றனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். தமிழக மக்கள் என் மீதும், திமுக மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது. இது எடப்பாடி பழனிசாமியை கலங்க வைத்துள்ளது. இதனால் அவர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அவரது 4 ஆண்டு கால ஆட்சி காலத்தில் செய்து முடித்துவிட்டு பெருமை படுகிறார்.

 

பொய்க்கு மேக்கப் போட்டால் அது நிஜமாகாது. எடப்பாடி பழனிசாமி நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என சொல்லமுடியுமா? கமினுக்கு பயந்து முதலீட்டாளர்கள் ஓடினர். நான் முதல்வராக பதவியேற்றப்பின்னர் மீண்டும் தொழில் முதலீட்டாளர்களை அழைத்தேன். இப்போது, பலரும் முதலீடு செய்ய வந்துள்ளனர். எடிப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படா முடியும் என மக்கள் எதிர்பாா்த்து இருந்தனர். மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், இன்று மத்திய மண்டலம் எனசுற்றி வருகிறேன். வளர்ச்சியை உறுதி செய்யவே களஆய்வு செய்து வருகிறேன். விருதுநகர் காப்பகத்தில் குழந்தைகளை சந்தித்தேன். அங்கிருந்த குழந்தைகள் என்னை அப்பா என அழைத்தது மனதை நெகிழ வைத்தது. விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களுடன் தற்போது ஊட்டச்சத்து உறுதித்திட்டத்தை 2-ம் கட்டமாக இன்று தொடங்கிவைத்துள்ளேன். இதனால் 7 லட்சம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நலிந்த மக்களுக்கான ஆட்சி இந்த ஆட்சி. குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை கேட்க முடியாது. அதனைசெய்யவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் நாளை வளர்ச்சி அடைந்த பிறகு, எனது திட்டங்கள் குறித்து பேசுவார்கள். எனது குடும்பம் முன்னேற ஸ்டாலின் ஒரு காரணம் என குழந்தைகள் நாளை சொல்வார்கள் என்றார்.

 

முன்னதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழுவுருவ சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராத்தில் டீன்ஷூஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கான சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், ஆ. ராசா, அருண்நேரு, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்,ம.பிரபாகரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி.அருண்ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல் இயக்குநர் ஆர் செல்வம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கே.செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.அலர்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியர்கள் அரியலூர் பொ.ரத்தினசாமி, பெரம்பலூர் கிரேஸ்பச்சாவ் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
மாங்காடு அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
தொழிற்பயிற்சி நிலையம் பெயர் பலகை திறப்பு விழா
ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.

May 14, 2024
96 Views
ஆல் இந்தியா சிலம்பம் பெடரேஷன்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை
விவசாய தொழிலாளர் சங்கத்தில் ஆயுத பூஜை
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account