மதுரை மாவட்டம்
திருமங்கலம் நகர் ரயில் நிலையம் அருகேயுள்ள பகத்சிங் தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இறையன்பு நுாலகம் மற்றும் ஆராய்ச்சியகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும்,
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய 167 நூல்களும் உள்ளது.
இந்த நூலகத்தில் மத்திய மாநில அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகிடும் வகையில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு நாள் தோறும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை இறையன்பு நூலக நிறுவனர் நா.பார்த்தசாரதி முன்னின்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நூலகத்தில் பயின்ற ரூபன்குமார், மனோஜ் பிரபாகர்,
லோகேஷ்,
முருகேஸ்வரி,
கார்த்திக்,
சின்னச்சாமி, மருது உள்ளிட்ட ஏழு பேர் அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசுப்பணிக்கு தேர்வாகினர்.
இதையடுத்து நூலகத்தில் பயின்று தமிழ்நாடு அரசுப்பணிக்கு தேர்வான மாணவ,
மாணவியருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இறையன்பு நூலக நிறுவனர் நா.பார்த்தசாரதி தலைமை வகித்தார். திருமங்கலம் நகரின் பிரபல தொழிலதிபர் டாக்டர்.சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.