நாகர்கோவில் ஏப். 29
காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் சாரதா. தனது மகனுடன் ஆம்புலன்ஸில் வந்து கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். அதில் எனது மகன் அருண் (30). 2023 – 24 ஆம் ஆண்டில் வீட்டு வேலைக்கு தனியார் வங்கியில் இருந்து லோன் எடுத்து பராமரிப்பு பணிகள் செய்தார். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார் 6 மாதம் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தார். இதனால் எங்களால் தனியார் வங்கியில் லோன் கட்ட முடியவில்லை. பிரச்சனை மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றது.
நீதியரசர் நோய் குணமடைந்து வீட்டில் வந்து லோனை வங்கியில் செலுத்த உத்தரவிட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்தபோது வங்கி ஊழியர்கள் மக்கள் நீதிமன்றம் மூலம் வீட்டுக்கு சீல் வைத்தனர். இதனால் மாற்று உடை உணவுக்கு வழியின்றி இருக்கிறோம். தற்போது ஆதரவின்றி நடுத்தெருவில் நிற்கிறோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு அளிக்க வந்த சாரதா தனது மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.