கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் 60 வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் காமராஜ் பவனில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் என். கே.பகவதி தலைமை வகித்தார். மேலும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட நிர்வாகிகள் சிற்பி .ஜெகதீசன், பிரகாஷ், மோகன்ராஜ், கனகராஜ், தென்னரசு, சுப்பு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர வட்டார நிர்வாகிகள்.. கோபால், ஹரிமகாலிங்கம்,சிவசாமி, மூர்த்தி,மணிகண்டன், அருண் பிரசாத், அய்யாசாமி, மயில்சாமி,ஈஸ்வரன்,மகளீர் காங்கிரஸ் கலாவதி, தமிழ்செல்வி, வள்ளிநாயகம், சாந்தி,தோடர் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



