கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஜெ.கே.தென்னை ஆராய்ச்சி மையத்தில் அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் முதலாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்னை ஆராய்ச்சியாளரும் அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்க தலைவருமான அரசம்பட்டி தென்னஞ் செடி ஜெ.கென்னடி தலைமை வகித்தார். அரசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் புலவர்.கிருஷ்ணன், வரதராஜன், முன்னாள் துணை வேளாண்மை இயக்குனர் அருண்அழகுதம்பி, விவசாய சங்க தலைவர் சிவகுரு, துணை தலைவர் கணேசன், துணை செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார், aவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உயிர்மச் சான்று ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர் தங்கதுரை, மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ரூபாச்சந்தர், மாங்காய் மண்டி வேல், நேரு, சிவலிங்கம், கே.எம்.சக்திவேல், சம்பத், நிஜாம்சேட், கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், வரதராஜன், சாதிக்பாஷா, கெளதம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் போச்சம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமெனவும், அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு தமிழக அரசு வழங்கியுள்ள நிலையில் இந்த பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமெனவும், தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்து கிடைக்கும் மானியத்தை விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் ஏற்ப்படுத்தி தரவேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



