மயிலாடுதுறை 16.08.2024
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் கிராமத்தில் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் உள்ள மங்கைநல்லூர், அரிவேளூர், பண்டாரவாடை, வழுவூர், பெருஞ்சேரி, கப்பூர், தத்தங்குடி, கழனிவாசல், பொரும்பூர், எழுமகளூர் ஆகிய 10
ஊராட்சிகளுக்கு ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மங்கைநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். முன்னதாக ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு குழுக் கடனுக்கான காசோலை, மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் செய்து விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணை உள்ளிட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.