ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ‘பேட்டியா பேர்-2025’ என்ற தலைப்பில் தொழில் துறை வர்த்தக கண்காட்சி கடந்த 2 ந் தேதி முதல் 5 ந் தேதி வரை 4 நாட்கள் நடந்தது. இதை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
2 வது நாளில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு யோகா போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகள் வழங் கினார். தினமும் இந்த கண் காட்சியில் மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த கண்காட்சியின் நிறைவு நிகழ்ச்சி க்கு கூட்டமைப்பின் தலை வர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். செய லாளர் ரவிச்சந்திரன் முன் னிலை வகித்தார். கண்காட்சி தலைவர் ஜிப்ரி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்கும ரன் பங்கேற்று, கண்காட்சி யில் சிறந்து விளங்கிய ஸ்டா ல்களுக்கும், சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மேலும் பல் வேறு போட்டிக ளில் முதல் மூன்று இடங் களை பிடித்த சிறுவர், சிறுமி களுக்கு பதக்கம், பரிசு கோப் பை, சான்றிதழ்கள் வழங்கப் பட்டது.
முடிவில் கண்காட்சி செயலாளர் சின்னச்சாமி நன்றி கூறினார். நிகழ் ச்சிகளை பேராசிரியர் முனை வர் ரமேஷ் ஒருங்கிணைத் தார் கூட்டமைப்பின் பொரு ளாளர் முருகானந்தம், கண் காட்சியின் பொருளாளர் சிவ க்குமார், கண்காட்சி துணை தலைவர் செந்தில் குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர் .



