நாகர்கோவில் செப் 26
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி திருவள்ளூர் பூங்கா முன்பு சாலையில் நின்ற ஒரு மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதியவர் ஒருவர் திருட முயன்று உள்ளார். அவர் தனது கை பையில் மறைத்து வைத்திருந்த போலி நம்பர் பிளேட்டை சாலையில் நின்ற வண்டியில் பொருத்தி திருட முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனே முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் வள்ளியூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது பின்னர் இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முதியவரை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் இதில் முதியவர் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் நம்பர் பேட்டை மாற்றி வள்ளியூர் எடுத்து சென்று விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இளைஞர்கள் முதியவரை பிடித்து விசாரித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.