தஞ்சாவூர். செப்.16.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத் தில்முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மூலிகை தோட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமை யில் எம்எல்ஏக்கள் துரை. சந்திர சேகரன் டி கே ஜி நீலமேகம் மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதிஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் 100 மூலிகை செடிகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்டவாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர்கோபாலகிருஷ்ணன்,மாவட்ட நூலகர் முத்து ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் தோட்டக்கலைதுறை துணை இயக்குனர் வெங்கட்ராமன்,கலை மாமணி டாக்டர் நரேந்திரன் முன்னாள் ஆளுநர் டாக்டர் குணசேகரன் பாம்பே ஸ்வீட்ஸ் சுப்ரமணிய சர்மா, கவின்மிகு தஞ்சை தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல்,வாசகர் வட்ட துணைத்தலைவர்கள் பன்னீர்செல்வம் அறிவானந்தம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், காஸ்மாஸ் சுழற் சங்கம், வாசகர் வட்டம், கவின் மிகு தஞ்சை ஆகிய சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்