சுரண்டை டிச 27
சுரண்டை காவல் நிலைய பகுதிகளில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை ஒருங்கினைத்து சுரண்டை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட கண்ட்ரோல் மையம் துவக்க நிகழ்ச்சியில் நடந்தது.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் டிஎஸ்பி (பொ) மீனாட்சி நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் தென்காசி எஸ்பி சீனிவாசன் கேமராக்களை இயக்கி வைத்தார்,
அப்போது பேசிய அவர் தற்போது உள்ள நவீன யுகத்தில் பல திருட்டு வழக்கு உள்ளிட்ட பல குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண் போன்று முக்கிய பங்கினை வகிக்கிறது அத்துடன் குற்றங்களை தடுப்பதிலும் சிறந்த இடத்தைப் பிடிக்கிறது. ஆகவே அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தெருக்கள், ரோடுகள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நிறுவ வேண்டும் எனவும்
தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் 1285 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது சுரண்டை காவல்நிலைய பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்ட 85 கேமராக்களை ஒருங்கிணைத்து காவல் நிலையத்தில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது இதில் 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பர் எனவும் மக்களின் காவலன் திட்டத்தை பொதுமக்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக சாம்பவர்வடகரை ரோடு மற்றும் பரன்குன்றாபுரம் விலக்கு, கோட்டைத் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்களை துவக்கி வைத்தார்.
உடன் எஸ்ஐ கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.