மதுரை டிசம்பர் 2,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாட்டுவண்டி போட்டியை காண ஏராளமான சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.