கருங்கல், ஆக-11
குமரி மாவட்டம் கருங்கலில் பாஜக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டமானது கருங்கல் ஆட்டோ நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார பாஜக தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.
நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் சுடர்சிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரரவீந்திரன், சந்திரன் உட்பட பலர் பேசினர்.
பாஜக நிர்வாகிகள் மோகன்சந்திர குமார், தாணுமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.