பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்
பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தொடங்கியது.பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் யுவராஜ் வரவேற்றார்.மூன்று நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாவட்ட கூடுதல் நீதிபதி சாந்தி குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பிரமணியன், குற்றவியல் நடுவர் நீதிபதி பாண்டி மகாராஜா ஆகிய புத்தகம் வாசிப்பு, புத்தகத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து பேசினர்.விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் தினகரன் ,இளங்கோவன்,ஆதி கோபாலன், பசுமலை செளமிய நாரயணன்,முத்துக்கண்ணன் இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.இறுதியில் பொருளாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்.
பட விளக்கம்.
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மூன்று நாள் புத்தக கண்காட்சியை மாவட்ட கூடுதல் நீதிபதி சாந்தி தொடங்கி வைத்தார்.