ராமநாதபுரம், மே 11
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், மருத்துவர் அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி தொடங்கி வைத்தார்.
மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேது பாலசிங்கம், முன்னிலை வகித்தனர். தகவல் தொழில் நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார் வரவேற்றார். முன்னாள் வாரியத் தலைவர் முனியசாமி பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், மாணவரணி மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மருத்துவர் அணி மாவட்ட செயலர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ரத்தினம், அண்ணா தொழிற்சங்க (போக்குவரத்து பிரிவு) துணை செயலர் ரத்தினம், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ர ஜானகி ராமன், திருப்புல்லாணி ஒன்றிய செயலர் செல்லதுரை, ஆர் எஸ் மங்கலம் ஒன்றிய செயலர் கருப்பையா உள்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 314 பேர் ரத்த தானம் வழங்கினர்.
முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஆனிமுத்து, தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் அரவிந்த், அண்ணா தொழிலாளர் சங்க (போக்குவரத்து பிரிவு) மண்டல செயலாளர் சந்திரன், மண்டலத்தலைவர் முத்துராமன், ராமேஸ்வரம் கிளை தலைவர் முத்துராமலிங்கம்,
மாவட்ட இளைஞரணி துணை செயலர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலர் செந்தில் குமார், ராமநாதபுரம் நகர் துணை செயலர் ஆரிப் ராஜா, ராமநாதபுரம் நகர் முன்னாள் செயலர் வரதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா நன்றி கூறினார். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் மாவட்டச் செயலாளர் முனியசாமி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.