முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாடு அரசு பனை தொழிலாளர்கள் நலவாரியத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மும்மத கோயில்களில் சிறப்பு பூஜைகள் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனரும் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மாநில இளைஞரணி தலைவர் கார்த்திக் நாராயணன் ஆலோசனைப்படி, தென்மண்டல நாடார் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மு.விஸ்வநாதன் ஏற்பாட்டில், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில்,
இராமநாதபுரம், தாமரைக்குளம் ராமேஸ்வரம் ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் முன்னிட்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தாமரைக்குளம் கிராமத்தில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது. பரமக்குடி ஒன்றியம் சார்பில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வுகளில் மாவட்ட அவைத்தலைவர் ஜார்ஜ், மாவட்ட அமைப்பாளர் மெய்கண்ட முருகன், மாவட்ட செயலாளர் வேல். மோகன்தாஸ், மண்டபம் ஒன்றிய தலைவர் பாலமுனீஸ், மாவட்ட துணை செயலாளர் மஞ்சுளா மற்றும் மாவட்ட மகளிரணி தலைவர் பாண்டியராணி,
பரமக்குடி ஜான்,மணி,ஜெகன், முனிஷ்,அஜித் மற்றும் நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.