ஈரோடு ஆக. 10
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சி, ராமயலூர் பகுதியில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் வேண்டி கோரிக்கை வைத்தனர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். அதே பகுதியில் பழமையான தொகுப்பு வீடுகளை கணக்கெடுத்து சீரமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ராமபயலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பள்ளியில் குடிநீர் தொட்டியினை தூய்மையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
புஞ்செய்புளியம்பட்டி நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து பவானிசாகர் பேரூராட்சி நீர் அணைக்கட்டு பகுதியில் ரூ.12.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பவானிசாகர் பழைய மீன்பண்ணையில் மீன்குஞ்சுகள் உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் பணியினை ஆய்வு மேற்கொண்டு, மீன் இனப்பெருக்கத் தொட்டி, நீர் தேக்கத் தொட்டி, மீன்களுக்கு வழங்கப்படும் தீவனம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
விண்ணப்பள்ளி ஊராட்சி பாரதிநகர் பகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 40 வீடுகள் கட்டப்பட்டு வருதையும், அனைக்கவுண்டன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டில் குளம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, புஞ்செய்புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர்
முகம்மது சம்சுதீன் நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன்
நகராட்சி பொறியாளர் கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)
கணேசன், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) கதிரேசன்,
சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல், பவானிசாகர் பேரூராட்சி செயல்
அலுவலர் சரஸ்வதி உட்பட துறை அலுவலர்கள்
உடனிருந்தனர்.