கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிகளில் டிசம்பர் மாதம் பெய்த
பெஞ்சல் புயல் கனமழையால் ஏற்பட்ட விலை நிலங்கள் சேதம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் தலைமையில்
ஊத்தங்கரை, காரப்பட்டு, வண்ணாம்பள்ளி, போன்ற பகுதிகளில் தக்காளி ,நெல், மஞ்சள், ஆகிய பயிர்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார், மேலும் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் விவசாயிகள் பயிர் இடுவதற்கு செய்துள்ள செலவினம் குறித்தும், அதனால் ஏற்பட்ட நஷ்டம், பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்த விவரம் குறித்தும் கேட்டறிந்தனர்,இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் குமரன், கோட்டாட்சியர் ஷாஜகான், வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் திருமதி இந்திரா, பேரிடர் மேலாண்மை துறை தனி வட்டாட்சியர் ஜெய்சங்கர், வட்டாட்சியர் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி தவமணி
ஆகியோர் உடன் இருந்தனர் ,பிறகு ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் ப மதிப்பீடு கூட்டம் நடைபெற்றது.