பாரூர் ஏரி மீன்பிடிப்பு தகராறு: 60 மீனவர்கள் vs 10 புதியவர்கள்
அரசு அதிகாரிகள் 2பேருக்கு போலியான மீனவர் பதிவு எண் கொடுத்து மீன்பிடிக்க அனுமத்தித்தது தான் இதற்க்கு முக்கிய காரணம் என மீனவர்கள் வேதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் பெரிய ஏரியில் 60 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், புதிய 10 நபர்கள் ஏரியில் மீன்பிடிக்க முயன்றதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
* 60 நாட்களுக்குப் பிறகு ஏரியில் மீன்பிடிக்க சென்ற 60 மீனவர்கள், ஏற்கனவே மீன்பிடிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக கூறினர்.
* புதிதாக 10 நபர்கள் தங்களை மீனவர்கள் என கூறி ஏரியில் இறங்க முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
* ஏற்கனவே மீன்பிடிக்கும் மீனவர்கள், புதியவர்கள் போலியான நம்பர்களை வைத்து மீனவர்கள் என கூறுவதாகவும், இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
அரசு அதிகாரிகள் 2பேருக்கு போலியான மீனவர் பதிவு எண் கொடுத்து மீன்பிடிக்க அனுமத்தித்தது தான் இதற்க்கு முக்கிய காரணம் என மீனவர்கள் வேதனை
* சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக இரு தரப்பினரும் மீன்பிடிக்க அனுமதித்தனர்.
* இரு தரப்பினரும் இணைந்து புதியவர்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.