மதுரை நவம்பர் 30,
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி மதுரை மாவட்ட உதவி ஆணையர் அவர்களின் முன்னிலை மற்றும் திருப்பரங்குன்றம் திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் எம்.சூரிய நாராயணன், இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் து.வளர்மதி, அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்தியபிரியா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நா.மணிச்செல்வம், திமு.பொம்மதேவன், வ.சண்முகசுந்தரம், தி.இராமையா, இந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் ஆய்வர், இளவரசி
இத்திருக்கோயில்
கண்காணிப்பாளர்கள் ச.அ.சுமதி, நா.ரஞ்சனி, ஜெ.சத்தியசீலன் மற்றும் இத்திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள், மதுரை அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பு வருமானம் ரூபாய் 49,60,663 மற்றும்
உண்டியல் திறப்பில் கிடைக்கப்பெற்ற
தங்கம் 91 கிராம், வெள்ளி 1 கிலோ 972 கிராம், செம்பு பித்தளை 5 கிலோ 800 கிராம், தகரம் 4 கிலோ உண்டியல் திறப்பில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது