தென்காசி மாவட்டம் தென்காசி இ.சி,ஈ.அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் சுய உதவி குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வங்கி கடன் உதவிகள் பெற்றுத் தரப்பட்டு அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யப்பட்டு வருகிறது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் மதுரை மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சி காணொளி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பப்பட்டு அதே சமயம் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தற்போது தென்காசி மாவட்டத்தினை சார்ந்த 504 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.63 கோடி தொகை வங்கி கடனாகவும், 20 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடனாக ரூ. 11.36 கோடி, 8 சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.8.இலட்சமும், 95 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ. 14 இலட்சமும் , 10 சுய உதவி குழுக்களுக்கு வட்டார வணிக வளமையம் மூலம் ரூ.50இலட்சமும், இணை மானிய திட்டத்தின் மூலம் 26 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.75 இலட்சமும், சிறு தொழில் முதலீட்டு நிதி 10 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.5 இலட்சம் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 647 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 9424 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.51 (கோடி) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா ,பிரியதர்ஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட மேலாளர் (தொழில் மையம்) மாரியம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



