கோவை ஜூன்:18
கோவை பூ மார்க்கெட் அருகே உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் இயன்றை பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாடபடுகிறது.
பிறருக்கு கல்வி உணவு போன்றவற்றை தியாகமாக கொடுப்பதற்காக தான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதாக இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.
பக்ரீத் தொழுகை முடிந்த பிறகு செல்வந்தர்கள் தாங்கள் வளர்த்த வந்த ஆடு மாடுகளை பலியிட்டு உறவினர்களுக்கும் வசதி இல்லாத மக்களுக்கும் தானமாக வழங்குவார்கள்.