மதுரை நவம்பர் 30,
மதுரையில் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு
மதுரை இரயில்வே சந்திப்பு கிழக்கு நுழைவு வாயிலில் மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள், விபத்து தவிர்ப்பு, விழிப்புணர்வு அடங்கிய படங்களை 150 அடி நீளத்திற்கு பிளக்ஸ் பேனரில் கல்லூரி மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரச்சுரம் வழங்கினர். இந்நிழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி, மதுரை மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன் சண்முக சுந்தரம் மற்றும் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.