இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் .கே.நவாஸ்கனி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் .காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருடன் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி மேற்கொண்டனர்.