தஞ்சாவூர் ஜூலை 22.
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக் கான 24-ஆம் ஆண்டு அறிவியல் தெரிவிப்பியல் திறனாய்வு போட்டி கள் 61-ஆம் ஆண்டு அறிவியல் பூங்கா இதழ் வெளியீடு, அறிவியல் களஞ்சியம் பரிசுகள், பல்வகை விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
சென்னை மயிலை திருவள்ளுவ ர் தமிழ் சங்கத்தின் அறிவியல் பூங்கா காலாண்டு இதழ், நிப் டெம் நிர்வாகம், திருவள்ளுவர் இருக் கையின் பன்னாட்டு திருக்குறள் அமைப்புகளின் இணையும் ஆகிய வை சார்பில் நடைபெற்ற விழா விற்கு நிப்டெம் இயக்குனர் பழனிமுத்து தலைமை வகித்தார் மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்க நிறுவன சேயோன் அறிமுக உரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் 61 ஆம் அறிவியல் பூங்கா இதழ் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்வி கழகசெயலர் சொக்கலிங்கத் துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக மொழி பெயர்ப்பு துறை முன்னாள் தலைவர் பழனி அரங்க சாமிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி, திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர் ,சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் துறை முன்னாள் முதன்மையர் கபிலன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் நரேந்திரன், அகில இந்திய வானொலி முன்னா ள் இயக்குனர் முருகானந்தம் ஆகியோருக்கு அறிவியல் களஞ்சிய விருதும் ,மத்திய அரசின் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் சட்ட ஆலோசகர் ராமசாமி ,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெக்ரூசா மைய இயக்குனர் பிரசன்னா, முனைவர் நடராஜமூர்த்தி, திருச்சி காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மதுரை ஸ்ரீ மீனாட்சி நாட்டிய கலாலயாநிறுவனர் பிரேமா கருணாநிதி ஆகியோருக்கு அறிவு களஞ்சிய விருதுகளும் வழங்கப் பட்டன .இதையடுத்து தஞ்சாவூர் உலக திருக்குறள் பேரவை, திருவையாறு ஔவைக்கோட்டம், திருவையாறு பாரத இயக்கம், திருச்சிராப்பள்ளி தமிழிசை சங்கம் திருச்சி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் ஆகியவற்றுக்கு திருக்குற ள் நெறிச்சுடர் விருதுகளும், வேதாரண்யம் கஸ்தூரி காந்தி கன்னியா குறிப்பிடம் இல்ல நிர்வா க அலுவலர் அப்பா குட்டி வேதரத்தி னம், தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி நிறுவனர் தம்பையா ,தஞ்சாவூர் சித்தர் ஆசிரம நல வாழ்வு மைய நிறுவனர் சித்தர் ,அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மைய நிறுவனர் தட்சிணாமூர்த்தி, திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் விஜய குமார் ஆகியோருக்கு சேவை செம்மல் விருதுகளும் வழங்கப் பட்டன.
முன்னதாக நிப்டெம் மக்கள் தொடர்பு அலுவலர் அமுதசுரபி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தமிழ் பல்கலைகழக ஓய்வு பெற்ற பேராசிரியர் திலகவதி நன்றி கூறினார்.