மானாமதுரை:பிப்:14
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள தீர்த்தான்பேட்டை கிராமத்தில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடையினையும் மானாமதுரை
சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார், பள்ளிக்குழந்தைகளை வைத்தே திறக்க வைத்தார்.
இந்த நிகழ்ச்சியானது பள்ளி குழந்தைகள் மத்தியில்ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.
இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் வழக்கறிஞர் அண்ணாத்துரை, முன்னாள் சேர்மன் லதா அண்ணாத்துரை, பள்ளி தலைமையாசிரியர் , பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.