கிருஷ்ணகிரி ஜூன் 4:
மூத்த பத்திரிக்கையாளர், முன்னாள் முதல்வர், திமுகவின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் சார்பில் , அன்னாரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தை சேர்ந்த மாவட்ட நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.