தக்கலை டிச 2
கன்னியாகுமரி மாவட்டம்,
முளகுமூடு பேரூராட்சி, கோழிப்போர்விளை கோடியூர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13.37 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் , தக்கலை தெற்கு வட்டார தலைவர் பொன்.சாலமன், மாவட்ட அமைப்பு செயலாளர் சாமுவேல்சேகர், மற்றும் முளகுமூடு பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.