புதுக்கடை, மார்- 2
புதுக்கடையில் பைக்கில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (65). இவர் அரசு உணவு வழங்கல் துறையில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பனச்சமூடு பகுதி எள்ளுவிளை என்ற இடத்தை சேர்ந்த ஜஸ்டின் எட்வின் என்பவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து புதுக்கடை – கருங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
கைசூண்டி சந்திப்பு பகுதியில் வைத்து எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று ஜஸ்டின் எட்வின் ஓட்டிய பைக்கில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சந்திரபோஸ், ஐஸ்டின் எட்வின் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்திர போசை காஞ்சிர கோடு பகுதியில் உள்ள மருத்துவமனையிலும், ஜஸ்டின் எட்வினை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் சிசிட்சைக்கு அனுப்பினர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.