மதுரை ஏப்ரல் 16 மதுரை சிந்தாமணி பர்மா காலனியில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் அம்பேத்கர் பிறந்த தின விழாவை முன்னிட்டு
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்ட இந்த
விழாவிற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தனபால், பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன் அவைத்தலைவர் கணேசன் வட்ட செயலாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா தங்கபாண்டியன் அம்பேத்கரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் சாதி சமுதாய மற்ற தாழ்வுகளை களையவும் அனைத்து சமூகத்தினருடன் சமத்துவத்துனும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தீண்டாமை உறுதி மொழி எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 400 பெண்களுக்கு அரிசி , சேலை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் மணிமாறன், மற்றும் கீர்த்திகா தங்கப்பாண்டியன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பிரமிளா. ரதி உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.