சிவகங்கை: மார்ச்:18
சிவகங்கை இந்திரா நகரில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெரியார் இராமு தலைமையிலும் ஒன்றிய அவைத்தலைவர் சேதுராமன், மாவட்ட பொருளாளர் இலந்தங்குளம் மதியழகன், வழககறிஞர்
ஜெயபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
வருகின்ற ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் படித்து முடித்த வேலையற்ற ஆதிதிராவிட இளைஞர்கள் 200 பேருக்கு
தாட்கோ மூலம் தொழில் முனைவோர் பயிற்சி வழங்க 25.4.2025 அன்று நடைபெறும் சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநிலத்தலைவர் பூமிநாதன், மகளிரணி குணவதி, ரகசியமணி, மாவட்ட துணைச்செயலாளர் கணேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு, ஒன்றிய செயலாளர் சஞ்செய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.