திருப்பூர் ஜூன்: 20
பெருமாநல்லூரில் 19.06.1970 அன்று நடந்த விவசாய போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகி தமிழக விவசாயிகளுக்காக தன் உயிரை துச்சம் என நினைத்த தியாகம் செய்த மாரப்ப கவுண்டர், ஆயிக் கவுண்டர், ராமசாமி கவுண்டர், தியாகச் செம்மல் மூவருக்கும் நினைவஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் சொல்லி நினைவஞ்சலியை இந்த சமுதாயத்தின் தியாக தினமாக அனுசரிக்க அனைத்திந்திய விவசாய சங்கம் அனைத்து விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் விவசாய மணி (எ) சுப்பிரமணி தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மலர் வளையம் வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கலந்து கொண்டனர்.



