முதுகுளத்தூர். மே14
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் ஏற்பாட்டில் விளங்குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள. மனம் நலம் குன்றியோர் மற்றும் ஆதரவற்றோர் நலப்பள்ளியில் உள்ள அனைவருக்கும் பிரியாணி வழங்கினார் பின்னர் முதுகுளத்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மத்திய ஒன்றிய கழக லாளர் எஸ்.டி.செந்தில்குமார் முன்னிலையில் விஷேச பூஜை செய்து பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
பின்னர் தாலுகா ஆபீஸ் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டனபின்னர் முதுகுளத்தூர் பஸ் நிலையம எதிரில் காஷ்மீர் எல்லையில் வீர மரணம் அடைந்தமுரளிநாயக் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மாவட்ட கழக செயலாளர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் தகவல் பிரிவு மண்டல செயலாளர் சரவணன்மாவட்ட விவசாய அணி துணை செயலாளர்கள் கண்ணன் சண்முகபாண்டி முதுகுளத்தூர் போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துவேல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வெங்களகுறிச்சி ராஜசேகர்முதுகுளத்தூர் நகர் துணை செயலாளர் குருசாமி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர் அனைத்து ஏற்பாடுகளையும் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் செய்திருந்தார்.