நாகர்கோவில் – ஜூன் – 10
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் தலைமை நீதிமன்ற சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து நிர்வாகிகள் கூட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மில்லர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வர வேண்டும். பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்று சேர்க்க வேண்டும். அப்போதுதான் இனி இந்த கட்சியை வழிநடத்த முடியும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவை தோற்கடிக்க முடியும், அது சசிகலா தலைமையில் தான் முடியும் என நாகர்கோவில் நடைபெற்ற அதிமுக மீட்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.