குமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய பணியில் ஈடுபட்ட நாகர்கோவில் மாநகராட்சி 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா. குமரி மாவட்டதில் தற்போது நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் நெல் நாத்து நடும் பணியில் தன்னை ஈடுபடுத்தி விவசாயத்தில் பெண்களின் பங்கின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் விவசாய பணியில் ஈடுபட்ட பெண்களுடன் சேற்றில் இறங்கி புது நாத்து நட்டு மகிழ்ந்த மாமன்ற உறுப்பிரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.



