சிவகங்கை , மார்ச் 25
சிவகங்கை மாவட்டம், S.புதூர் வட்டம் , அரியாண்டிபட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகளுடன் செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவர்கள் அபர்ணா.சா,ஹேமலதா. வை, K. கௌசிகா, தெர்ஷினா தென்னையில் ரைனோலுயூர் மற்றும் மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.மேலும் மஞ்சள் ஒட்டும் பொறியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றியும் கூறினார். மஞ்சள் வண்ண அட்டைகளில் ஒட்டும் பசை தடவப்பட்ட பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகவும் பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும் பயன்படுத்தபடுகிறது.
பின்னர்,பயர் வகைகளில் ஏற்படும் மஞ்சள் தேமல் நோய்,மலட்டு தேமல் நோய், வேர் அழுகல் நோய்,சாம்பல் நோய் அதனை கட்டுப்படுத்தும் முறையும் மேலும் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் அதன் சாகுபடி நுட்பங்கள் பற்றியும் கூறினார்.
மாணவிகளுடன் அரியாண்டிபட்டி விவசாயிகள் கலந்து கொண்டு புதிய மேலாண்மை முறைகளை தெரிந்து கொண்டனர்.