களியக்காவிளை, மார்- 12
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபூபக்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ரெஜினி முன்னிலை வகித்தார். பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு வந்திருந்த மாணவர்களை 5 ஆம் வகுப்பு மாணவர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லேட் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து, பள்ளியில் சேர்க்கைக்கு வந்த மாணவர்களின் பெற்றோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நயிமா, கிராம கல்விக்குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரிபாய், ஆசிரியைகள் லேகா, பினி சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலாம் வகுப்பில் 8 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.