தென்காசி ஏப் 23
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர பேருந்து நிலையத்தில் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொது மக்கள் புகைப்படக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நலத்திட்ட உதவிகள், ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படத்தினை பார்வையிட்டு அரசின் திட்டங்களை பற்றி அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் (செய்தி) மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.