தென்காசிஏப் 4
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்து உரிய வேலை கிடைக்காததால் கடந்த ஏழு மாதங்களாக பிச்சை எடுத்து வயிற்றை நிரப்பி வரும் கடையநல்லூர் வாலிபர் பெற்ற மகனை மீட்டு தர கோரி தாய் கலெக்டரிடம் புகார்….
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது கம்பனேரி புதுக்குடி கிராமம் இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் பக்கிரி என்பவரின் மனைவி மாரியம்மாள் இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் கணவன் இறந்த பின்பு மகனின் உழைப்பால் அன்றாடம் கஷ்ட ஜீவன் கழித்துவந்த மாரியம்மாள் ஒரு கட்டத்தில் மகன் செல்வ கிருஷ்ணனை (27) கடையநல்லூர் நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலமாக அரபு நாட்டிற்கு ஏசி மெக்கானிக் வேலைக்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி அனுப்பி வைத்துள்ளார் இந்நிலையில் அரபு நாட்டிற்கு சென்ற மகன் ஏழு மாதமாகியும் ஏசி மெக்கானிக் வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் வட்டிக்கு கடன் வாங்கி தன் மகனை அனுப்பி எப்படியாவது மாத மாதம் கடனை செலுத்தி விடலாம் என்று கனவு கண்ட நேரத்தில் அவர் தலையில் இடி விழுந்தது போல் அவர் மகன் இங்கு என்னை ஏசி மெக்கானிக் என்று கூறி கடையநல்லூரில் இருந்து ஏஜென்ட் அனுப்பி வைத்தார் ஆனால் எனக்கு ஊரிலிருந்து அனுப்பும் போது கூறிய ஏசி மெக்கானிக் வேலையை கொடுக்கவில்லை மாறாக கட்டிட வேலைகளுக்கு செல்ல கூறி அரபு நாட்டில் நிறுவனம் வைத்திருக்கும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட அந்த நிறுவனம் செல்வகிருஷ்ணனின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக் கொண்டு முடிந்தால் நாங்கள் சொல்கிற வேலையை செய் சம்பளம் தருகிறோம் இல்லை என்றால் உன்னால் ஆனதை பார் என சொல்ல செய்வதறியாத செல்வ கிருஷ்ணன்தான் வந்திருக்கும் அரபு நாட்டில் கடையநல்லூர் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் நடந்தவற்றை சொல்லி அணுகி அவர்கள் கூட்டாக தங்களோடு இணைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர்என அடைக்கலமும் கொடுத்து சாப்பாடு கொடுத்து வருகிறார்கள் பின் செல்வ கிருஷ்ணனுக்கு ஆதரவாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இந்திய தூதரகத்தை அணுகிய போது அங்கே நிறுவணம் வைத்திருக்கும் கேரளாவை சேர்ந்த உண்மைதாரருக்கு ஆதரவாக பேசியதாகவும் தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தனது தாய்க்கு செல்போன் மூலம் தெரிவித்தார் இந்த நிலையில் நடந்தவற்றை கூறி கண்ணீர் விட்டு அழுத செல்வ கிருஷ்ணன் தன் தாயிடம் எப்படியாவது என்னை அங்கிருந்து மீட்டெடுத்துச் செல்லுங்கள் என அழுது கதறினார் இதை அடுத்து மாரியம்மாள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி நாளில் மாரியம்மாள் தன் மகனை மீட்டெடுத்து தாயகம் திரும்ப உள்ளபடியே நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு புகார் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து வெளியுறவு துறை அலுவலகத்திற்கு முறையே நடவடிக்கைக்காக தங்களது கோரிக்கை அனுப்பி வைக்கப்படும் இதைத் தொடர்ந்து தங்கள் மகன் இருக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முறையே அந்த நிறுவனத்திடம் பேசி தங்கள் மகனை அங்கிருந்து மீட்டெடுத்து தாயகம் திரும்ப நடவடிக்கை எடுப்பார்கள் என ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டு வேலை பட்டினி கிடக்கும் வாலிபர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics