தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 19 தனியார் பள்ளிகளைச் சார்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளி மாணவ மாணவிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர் நிகழ்ச்சியில் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாதுஷா, செய்யது ஹில்வியூ நர்சரி பிரைமரி பள்ளி முதல்வர் லக்கி சந்திரபால், திமுக மாவட்ட துணை செயலாளர் கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ரஹீம் முன்னிலை வகித்தனர். லட்சியம் அசோசியேசன் நிறுவனர் பால கணேசன் வரவேற்றார்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி மேற் பார்வையாளர் டாக்டர் கலை கதிரவன் பரிசு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அழகுசுந்தரம், சிவன்பாண்டியன், மகேஸ்மாயவன், திவான் ஒலி, சுரண்டை நகர பொறுப்பாளர் கணேசன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி (எ) சங்கர், லட்சுமணன், முத்தையா, பண்டாரம். யூனியன் சேர்மன்கள் ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தென்காசி ஷேக் அப்துல்லா, துணை சேர்மன் கனக ராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாநிதி, வீராணம் சேக்முகமது, மல்லிகா சரவணன், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரமேஷ், பி.எஸ். அண்ணாமலை, கிருஷ்ணராஜா, மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ், ராமராஜ், ஷபீக்அலி, சுரேஷ், வக்கீல் சிவக்குமார், சுப்பிரமணியன், அப்துல்ரஹீம், கரிசல் வேல்சாமி, கருப்பணன், ராஜேஷ், கீழப்பாவூர் ஒன்றிய இளைஞரணி கோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிதா பாலகணேசன் நன்றி கூறினார்.