மார்த்தாண்டம் பிப். 17-
மார்த்தாண்டத்தில் அதிகாலையில் மரத்தடியுடன் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலியானார்
ஆற்றூர் செம்பகதோப்பு விளையைச் சேர்ந்த சசி மகன் ஜோடேவிஸ் 29 இவர் குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்
சம்பவத்தன்று அதிகாலை வெட்டுவெந்நியில் தனது மனைவி வீட்டிலிருந்து பைக்கில் ஆற்றூர் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்
பயணம் ஜங்ஷனை கடந்ததும் ரோட்டின் செங்குத்தான உயரமான பகுதியில் செல்லும் போது எதிரே ஒரு வாகனம் வர ரோட்டின் இடது புறமாக மரத்தடியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி பின் பகுதியில் மீது மோதினார்
இதில் ஜோ டேவிஸ் படுகாயம் அடைந்தார் உடனே குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டது ஆனால் செல்லும் வழியில் இறந்து போனார் இவருக்கு நான்கு மாதத்திற்கு முன் திருமணமாகி மனைவி தற்பொழுது கர்ப்பமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து ரோசிலி கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் கோட்டயம் அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்