தக்கலை, ஜன-18
தக்கலை அடுத்த அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவர் சா மில் அதிபர். இவரது மகன் ஆல்ரிக் ஜான் (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறையானதால் காலையில் அதிக நேரம் தூங்கி, தூக்க கலக்கத்தில் வீட்டில் உள்ள சமையலறையில் கதவை வேகமாக திறந்து அடைத்துள்ளார்.
அப்போது கதவின் மேல் பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்து ஆல்டிக் ஜான் கழுத்தில் விழுந்து குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசிட்சை பலனின்றி ஆல்டிக் ஜான் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குவது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.