தேனி செப் 11:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வன வேங்கை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரமோகன் தலைமையில் பழங்குடியின மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு சொந்த வீடு இல்லாமல் இருக்கிறோம் எங்களுக்கு சொந்த வீடு அரசு சார்பில் வழங்க வேண்டும் என்று கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு அரிசி பருப்பு, காய்கறிகள் கொண்டு சமைத்து அதை சாப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதை யடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி போராட்டம் நடத்திய அவர்களிடம் பேசி உங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதை அடுத்து கலைந்து சென்றனர் இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.