கன்னியாகுமரி அக் 21
சாலையில் ஒளிரும் விளக்கு அமைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறையின் செயலுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு.
கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை சார்பாக விபத்துகளை தடுக்க கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் அதிநவீன மினுக்கல் ஒளிரும் விளக்கு அமைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், அறிவுரைபடி கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையின் சார்பாக கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமான மினுக்கல் ஒளிரும் விளக்கு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக ஒளிரும் விளக்குகளை விபத்து நடைபெறும் இடத்தில் நிறுவிய போக்குவரத்து காவல்துறையின் செயலை வாகன ஓட்டிகள் மனதார பாராட்டி வருகின்றனர்.