ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலைச்செல்வம் தலைமை வகித்தார்
முதுகுளத்தூர் செப்.30-
புதிய தமிழகம் கட்சியின் முதுகுளத்தூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளமலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
அற்புதராஜ் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற செயல் வீரர் கூட்டத்தில்
மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்க சென்னை கோட்டையை நோக்கி அக்டோபர் 16ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் கண்டன பேரணியில் பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு பேரணியை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் .
தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் அருந்ததியினர் உள்இட ஒதுக்கீடை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்தூர் பேரூராட்சியின் சாக்கடை கழிவுகள் அனைத்தும் கிழக்குதிசை நோக்கி ஓடி கந்தசாமிபுரம், தேவேந்திரர் நகர், காமராஜ் நகர், முஸ்தபாபுரம் ,டாக்டர் ஜாகிர்உசேன் தெரு மற்றும் அரசு மாணவியர் விடுதி போன்ற பகுதிகள் சாக்கடையினால் பெரிது பாதிப்புக்கு உள்ளாகி டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதனால் விரைந்து முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் இதில் தக்க நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயல்வீரர் கூட்டத்தில்
செல்லூர் பிரபு தேவேந்திர நகர் மணி காக்கூர் சந்திரசேகர் முத்துச்சாமி மற்றும்
புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். நகர் துணை செயலாளர் கம்பர் பாண்டியன் நன்றி கூறினார்.