நாகர்கோவில் – ஜூன் – 12
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் அஜித்குமார் தலைமையில் , மாவட்ட நல அமைப்பு செயலாளர் முத்து சரவணன், மாவட்ட நல அமைப்பு சட்ட ஆலோசகர் மரிய பால்ராஜ் முன்னிலையில் , ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம் நடை பெற்றது. குமரி மாவட்ட நல அமைப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சிம்சன் வரவேற்ப்புறையாற்றினார்.
இந்த ஆர்பாட்டத்தில் குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன் அடைகின்றனர். தற்போது இந்த ஊராட்சிகளில் 8 ஊராட்சிகள் மாநகராட்சியிலும், தென்கரை, கல்குறிச்சி, முத்தாலக்குறிச்சி, ஆகிய ஊராட்சிகளை பத்மனாபபுரம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது மக்கள் நலக்குறைவது போல் உள்ளது மேலும் 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக வகை மாற்றம் செய்வது,25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த புதிய திட்டங்களை கைவிடக் கோரியும் பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை இரண்டாக பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்கி வகை மாற்றம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த கோரியும் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், உட்ப்பட பீமநகரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார், மேல சங்கரன் குழி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், திருப்பதி சாரம் ஊராட்சி மன்ற தலைவி சிந்து, உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உட்ப்பட ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை எனில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் விரைவில் அறிவிக்கப் போவதாக கூறினார்கள்.