தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில்
தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பனிப்பதிவேடு உள்ள 40 ஆண்டு காலம் பணிபுரிந்த டேங்க் ஆபரேட்டர்கள்,கிராம ஊராட்சியில் ரூபாய் 250 ஊழியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு பணி வரன் முறை வேண்டி 10 ஆண்டு பணிமுடித்த தூய்மை பணியாளர்களுக்கு காலை முறை ஊதியம் வழங்க வேண்டியும், 3 ஆண்டு பணி முடிந்த தூய்மை
பணியாள ர்களுக்கு சிறப்பு காலமுறை மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் 10,000 வழங்க வேண்டியும் மாபெரும் கருத்தரகம் நடைபெற்றது. கிருஷ்ணன் மாநிலத் தலைவர் தலைமை உரை ஆற்றினார் . மகேந்திரன் தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பத்திரிகையாளர், எழுத்தாளர்,சங்கர் மாநில பொருளாளர் செய்தி தொடர்பாளர், விஜயபாலன் மாநில பொதுச் செயலாளர், மகேஸ்வரிமாநில மகளிர் அணி செயலாளர், பொன்னையன்
மாநில தலைமை நிலை செயலாளர்,சங்கர் மாநில இணைச் செயலாளர்ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய ,நி ர்வாகிகள் கலந்து கொண்டனர். மணி மாநில செயற்குழு உறுப்பினர் நன்றியுரை வழங்கினார்.