தேனி மாவட்டம், ஜூன் – 15
தேனி மாவட்டம், கம்பம் மெட்டுச்சாலை தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாக காணப்படுகிறது தமிழ்நாடு மற்றும் கேரளா மக்கள் தங்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் மற்றும் கேரளா தோட்டவேலைக்கு செல்லும் வாகனம் மற்றும் சுற்றுலா பயணிகள் சரக்கு வண்டிகள் இச்சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றன இச்சாலை வளைவுகள் அதிகமாக காணப்படுகின்றன குறிப்பாக கொண்டை ஊசி வளைவின் அருகில் சாலை பள்ளம் அதிக அளவில் காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் பயணிக்கின்றன மழைக்காலங்களில் சாலை மிகவும் மோசமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றன இச்சாலையில் மின்விளக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது பெரிய விபத்து ஏதும் ஏற்படும் முன்பு பொதுமக்களின் நலன் கருதி சாலையில் உள்ள பள்ளத்தினை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குண்டும் குழியுமான கம்பம் மெட்டுச்சாலை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics